பிசிசிஐ சிஓஏ அமைப்பில் கருத்து வேறுபாடு

பிசிசிஐ சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக் குழு) அமைப்பில் பெண் அணிக்கு பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.


பிசிசிஐ சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக் குழு) அமைப்பில் பெண் அணிக்கு பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் வினோத் ராய், முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இருவரும் பிசிசிஐ தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் பணிக்காலம் முடிந்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்தது. இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட சச்சின், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோர் ஆலோசனைக் குழு மறுத்த நிலையில் கபில்தேவ், சாந்தா ரங்கசாமி, அன்ஷுமன் கெய்க்வாட் அடங்கிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டது. இதில் வினோத் ராய் தன்னிச்சையாக செயல்பட்டார் என டயானா குற்றம் சாட்டியுள்ளார்.
ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமிப்பதில், கேப்டன் கோலியின் வற்புறுத்தலை ஏற்ற நிலையில், மகளிர் அணிக்கு ரமேஷ் பவாரையே பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளரின் கோரிக்கையையும் ஏற்கப்பட வேண்டும். 
கடந்த ஜூலை மாதம் ரவி சாஸ்திரியை நியமித்த போது, விதிகளை மீறி குழுத் தலைவர் ராய், சிஇஓ ஜோரி செயல்பட்டனர். சாஸ்திரிக்கு காலக்கெடுவை நீடித்து தந்தனர். அனில்கும்ப்ளேவை அவமரியாதையாக வெளியேற்றினர். 
மகளிர் அணி பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் குழுவுக்கு அவகாசம் தர வேண்டும். சிஓஏ கூட்டங்களில் முடிவுகளை எடுப்பதில் எனக்கும் சம அதிகாரம் உள்ளது. எனது ஒப்புதல் இல்லாமல் முடிவுகளை எடுக்கக் கூடாது என பிசிசிஐ அதிகாரிகளுக்கு எடுல்ஜி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com