உலகக்கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து இந்தியா வெளியேற்றம்

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
புகைப்படம்: ஹாக்கி இந்தியா/டிவிட்டர்
புகைப்படம்: ஹாக்கி இந்தியா/டிவிட்டர்


உலகக்கோப்பை ஹாக்கி தொடர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 11-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஹர்மன்பிரீத் பந்தை எடுத்து தர ஆகாஷ்தீப் அதை கோலாக மாற்றி இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். 

ஆனால், 15-ஆவது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி கோல் அடித்து சமன் செய்தது. இதனாால் முதல் கால் பகுதி ஆட்ட முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. ஆனால், 2-ஆவது கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால், முதல் பாதி ஆட்ட நேர முடிவு வரை 1-1 என்ற சமநிலை நீடித்தது. 

இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், 3-ஆவது கால் பகுதி ஆட்டம் வரை கோல் எண்ணிக்கை கூடவில்லை. 

விறுவிறுப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 49-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக்கொண்ட அந்த அணி கோல் அடித்து போட்டியின் முக்கியமான கட்டத்தில் 2-1 முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானது. 

அதன்பிறகு, நெதர்லாந்து அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கோலாக மாறவில்லை.  இதனால், நெதர்லாந்து 2-1 என முன்னிலையிலேயே நீடித்தது. போட்டியின் கடைசி 5 நிமிடத்தில் கோல் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால், இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்திலும் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதையடுத்து, ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com