காயத்தால் அஸ்வின், ரோஹித் சர்மா விலகல்: இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு

காயம் காரணமாக முன்னணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் பெர்த் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 

காயம் காரணமாக முன்னணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் பெர்த் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 
ஆஸ்திரேலியாவில் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அடிலெய்ட் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரோஹித் சர்மா, ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.அஸ்வின் மொத்தமாக 6 விக்கெட்டை சாய்த்தார்.
வெள்ளிக்கிழமை  பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குகிறது. இதற்கிடையே ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் பீல்டிங் செய்த போது கீழே விழுந்ததில் முதுகில் காயம் ஏற்பட்டது. 
அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் இடது அடிவயிறு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பெர்த் டெஸ்டில் ஆட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் கணுக்காலில் காயமடைந்துள்ள தொடக்க வீரர் பிரித்வி ஷாவும் இன்னும் குணமாகவில்லை. 
இதனால் இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா. உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பெர்த் டெஸ்ட்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அஸ்வின், ரோஹித், பிரித்வி உள்ளிட்ட மூவரும் மூன்றாவது டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பெர்த் டெஸ்ட்டுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கேஎல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ்யாதவ். பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு உதவியாக வேகம் மற்றும் பெளன்ஸ்க்கு உதவும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com