சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அதிர்ச்சித் தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன்  ரியல் மாட்ரிட் அணி 0-3 என்ற கோல் கணக்கில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன்  ரியல் மாட்ரிட் அணி 0-3 என்ற கோல் கணக்கில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியும்-மாஸ்கோ அணியும் சான்டியாகோ பெர்னபு மைதானத்தில் புதன்கிழமை இரவு மோதின. மாஸ்கோ அணி வீரர்கள் பெடர் சாவ்லோவ், செச்னிகோவ், சிகுர்ட்ஸன் ஆகியோர் கோலடித்தனர். முக்கிய வீரர்களுக்கு ரியல் மாட்ரிட் ஓய்வு தந்திருந்தது.
எனினும் மாஸ்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. விக்டோரியா பிசென் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏஎஸ்.ரோமா அணியை வீழ்த்தியது. 
ஜுவென்டஸ் தோல்வி: பெர்ன்னில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி சாம்பியன் ஜுவென்டஸ் 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து சாம்பியன் யங் பாய்ஸ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. நட்சத்திர வீரர் ரொனால்டோ தலைமையிலான அணி யங் பாய்ஸ் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்த சீசனில் வெளிநாட்டில் பெற்ற முதல் தோல்வியாகும். 
மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி; லண்டனில் நடைபெற்ற மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1  என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் வீழ்ந்தது.   
ஜெர்மனியின் முதல்நிலை அணியான பேயர்ன் முனிக்-அஜாக்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது. எனினும் பேயர்ன் அணி குரூப் இ பிரிவில் முதலிடம் பெற்று நாக் அவுட் சுற்றில் நுழைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com