உலக டூர் ஃபைனல்ஸ்: அரையிறுதியில் சிந்து, சமீர்

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர்
உலக டூர் ஃபைனல்ஸ்: அரையிறுதியில் சிந்து, சமீர்

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மாவும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றார்.
குவாங்ஷு நகரில் நடைபெறும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 21-9, 21-15 என்ற செட் கணக்கில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை எளிதாக வீழ்த்தினார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியின் மூலமாக "குரூப் ஏ'-வில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து. வெற்றிக்குப் பிறகு சிந்து கூறுகையில், "முதலில் தடுமாறினாலும், பிறகு மீண்டு வந்தேன். ஏற்கெனவே பெய்வென்னுக்கு எதிராக பல ஆட்டங்கள் விளையாடியிருந்தாலும், நீண்ட இடைவெளிக்கும் பிறகு இதுவே அவருக்கு எதிரான முதல் ஆட்டமாகும்' என்றார். சிந்து தனது அரையிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை சந்திக்கிறார்.
இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இப்போட்டியில் முதல் முறையாக களம் கண்ட இந்தியாவின் சமீர் வர்மா 21-9, 21-18 என்ற செட்களில் தாய்லாந்தின் கன்டபோன் வாங்செரோனை 44 நிமிடங்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலமாக "குரூப் பி'-யில் அவர் முதலிடம் பிடித்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய சமீர் வர்மா, "ஸ்விஸ் ஓபன் போட்டியில் ஏற்கெனவே கன்டபோனுடன் விளையாடியுள்ளதால், அவரை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்திருந்தேன். 2-ஆவது செட்டில் சற்று தடுமாறினேன். பின்னர் பயிற்சியாளரின் ஆலோசனையுடன் அதைக் கடந்து வந்தேன்' என்றார்.
சமீர் வர்மா தனது அரையிறுதியில் சீனாவின் ஷி யுகியை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com