ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு- 213/9

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் தமிழ்நாடு 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் தமிழ்நாடு 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் சண்டீகர் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச தீர்மானித்தது. தமிழ்நாடு அணியில் ஜெகதீசன்-அபினவ் முகுந்த் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். 
இதில் அபினவ் முகுந்த் 5 ரன்களில் வெளியேற, அபராஜித் களம் புகுந்தார். மறுமுனையில் ஜெகதீசன் 19 ரன்கள் சேர்த்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் இந்திரஜித் டக் அவுட்டானார். தொடர்ந்து ஆடியவர்களில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களில் பெவிலியன் திரும்ப, விஜய் சங்கர் மட்டும் அதிகபட்சமாக 7 பவுண்டரிகள் உள்பட 71 ரன்கள் சேர்த்தார். இவர்களில் இந்திரஜித், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பல்தேஜ் சிங் பந்துவீச்சில் பெளல்டாகினர். 
ஷாருக் கான் 19, முகமது 27 ரன்களில் நடையைக் கட்ட, கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வெள்ளிக்கிழமை முடிவில் சாய் கிஷோர், நடராஜன் இணை ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தது. பஞ்சாப் தரப்பில் மன்பிரீத் கோனி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், பல்தேஜ் சிங் 3, சந்தீப் சர்மா 1 விக்கெட் எடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com