பெர்த் டெஸ்ட்: தடுமாற்றத்துடன் தொடங்கியது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 108.3 ஓவர்களில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பெர்த் டெஸ்ட்: தடுமாற்றத்துடன் தொடங்கியது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 108.3 ஓவர்களில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அடுத்து தனது இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளிக்க, கோலி-ரஹானே கூட்டணி நிதானமாக ரன்கள் சேர்த்தது.
முன்னதாக, டாஸ் வென்று முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலியா வெள்ளிக்கிழமை முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், டிம் பெய்ன் 16, பேட்ரிக் கம்மின்ஸ் 11 ரன்களுடன் 2-ஆம் நாள் ஆட்டத்தை சனிக்கிழமை தொடங்கினர்.
100-ஆவது ஓவரில் 300 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ், மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே முடிவுக்கு வந்தது. கம்மின்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 105-ஆவது ஓவரில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பும்ரா வீசிய அடுத்த ஓவரில், 38 ரன்கள் அடித்திருந்த டிம் பெய்ன் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்தவர்களில் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களில் வெளியேற, கடைசி விக்கெட்டாக ஹேஸில்வுட் டக் அவுட்டானார். இருவருமே இஷாந்த் சர்மா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக நாதன் லயன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் மொத்தமாக இஷாந்த் சர்மா 4, பும்ரா, உமேஷ், விஹாரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா-172/3: இதையடுத்து இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கிய லோகேஷ் ராகுல்-முரளி விஜய் கூட்டணி, தடுமாற்றத்துடன் ஆட்டமிழந்தது. 
முரளி விஜய் டக் அவுட்டாக, லோகேஷ் ராகுல் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். முறையே, ஸ்டார்க், ஹேஸில்வுட் அவர்கள் விக்கெட்டை வீழ்த்தினர். 
அடுத்து வந்த புஜாரா சற்று நிலைத்தாலும், 24 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அடுத்து களம் கண்ட கேப்டன் கோலி-ரஹானே கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்து ஸ்கோரை உயர்த்தியது.
கோலி 109 பந்துகளிலும், ரஹானே 92 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். 2-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் இந்தியா 172 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 82, ரஹானே 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 2, ஹேஸில்வுட் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ûஸ ஸ்கோரை எட்ட இந்தியா 154 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

சுருக்கமானஸ்கோர்
(2-ஆம் நாள் முடிவில்...)

முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா
108.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326
ஹாரிஸ்-70, டிராவிஸ்-58, ஃபிஞ்ச்-50
பந்துவீச்சு: இஷாந்த்-4/41, பும்ரா-2/53, விஹாரி-2/53
இந்தியா
69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172
புஜாரா-24, கோலி-82*, ரஹானே-51*
பந்துவீச்சு: ஸ்டார்க்-2/42, ஹேஸில்வுட்-1/50

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com