ஐசிசி கேப்டனான ஹர்மான்ப்ரீத் கௌர்! 2018-ன் சிறந்த ஒருநாள், டி20 மகளிர் அணிகளும் அறிவிப்பு

2018-ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 மகளிர் அணிகளை ஐசிசி திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 
ஐசிசி கேப்டனான ஹர்மான்ப்ரீத் கௌர்! 2018-ன் சிறந்த ஒருநாள், டி20 மகளிர் அணிகளும் அறிவிப்பு

2018-ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 மகளிர் அணிகளை ஐசிசி திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக இந்திய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனை ஹர்மான்ப்ரீத் கௌர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூஸிலாந்து வீராங்கனை சூசி பெய்ட்ஸ் ஒருநாள் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி ஆட்டம் வரை இந்திய அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றார். மேலும் அந்தத் தொடரில் 160.5 ஸ்டிரைக் ரேட் உடன் மொத்தம் 183 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 2018-ஆம் ஆண்டில் மட்டும் 25 டி20 போட்டிகளில் விளையாடி 126.2 ஸ்டிரைக் ரேட் உடன் 663 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி மகளிர் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ளார்.

இதுகுறித்து ஹர்மான்ப்ரீத் கௌர் கூறுகையில்,

இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நான் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் அதிகளவிலான டி20 ஆட்டங்களில் விளையாடியதில்லை. எனவே டி20 தொடரில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்திய அணிக்கு ஏற்படுத்த பெரும் சிரமப்பட்டேன். இருப்பினும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு தான் பாராட்டுக்கள் சேரும். இந்த கௌரவம் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ-யும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு சாதிப்பேன் என்றார். 

11 பேர் கொண்ட மகளிர் ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:

டம்மி மேமாண்ட் (இங்கிலாந்து), சோஃபி எக்கலஸ்டோன் (இங்கிலாந்து), ஸ்மிருத்தி மந்தானா (இந்தியா), பூணம் யாதவ் (இந்தியா), சூசி பெய்ட்ஸ் (கேப்டன், நியூஸிலாந்து), சோஃபி டிவைன் (நியூஸிலாந்து), டேன் வான் நீய்க்கெர்க் (தென் ஆப்பிரிக்கா), மரிசேன் காப் (தென் ஆப்பிரிக்கா), அலைஸா ஹீலி (ஆஸ்திரேலியா), சனா மிர் (பாகிஸ்தான்), தியேன்திரா டாட்டின் (மே.இ.தீவுகள்).

11 பேர் கொண்ட மகளிர் டி20 அணி விவரம் பின்வருமாறு:

அலைஸா ஹீலி (ஆஸ்திரேலியா), எல்லீஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ஆஷ்லீ கார்ட்னெர் (ஆஸ்திரேலியா), மேகன் ஸ்கட் (ஆஸ்திரேலியா), ஸ்மிருத்தி மந்தானா (இந்தியா), ஹர்மான்ப்ரீத் கௌர் (கேப்டன், இந்தியா), பூணம் பாண்டே (இந்தியா), சூசி பெய்ட்ஸ் (நியூஸிலாந்து), லேக் கேஸ்பெரெக் (நியூஸிலாந்து), ருமானா அஹமது (வங்கதேசம்), நடாலி ஸ்கெய்வர் (இங்கிலாந்து). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com