விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணிக்கு திரும்பிய விஜய், அஸ்வின்

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடவுள்ள தமிழக அணி அறிவிக்கப்பட்டது. இதில் விஜய், அஸ்வின் இடம்பிடித்தனர்.
விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணிக்கு திரும்பிய விஜய், அஸ்வின்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக பாபா அபராஜித் செயல்படுகிறார்.

ரஞ்சி போட்டிகளில் தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்ட மூத்த வீரர் அபினவ் முகுந்த், காயம் காரணமாக இதில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் அஸ்வின் கிறிஸ்ட் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் தினேஷ் கார்த்திக் இந்த தொடருக்கான தமிழக அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் மூத்த வீரர்களான முரளி விஜய் மற்றும் அஸ்வின் ஆகியோர் தமிழக அணிக்கு திரும்பியுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் விஜய், அஸ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விளையாடினர். தற்போது அவர்கள் இருவரின் வரவு தமிழக அணியின் பலத்தை அதிகரித்துள்ளதாக தமிழக கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எஸ்.சரத் தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான 16 பேர் கொண்ட தமிழக அணி விவரம்:

விஜய் சங்கர் (கேப்டன்), பி.அபராஜித் (துணைக் கேப்டன்), ஆர்.அஸ்வின், எம்.விஜய், எம்.கௌஷிக் காந்தி, எம்.எஸ்.வாஷிங்டன் சுந்தர், கங்கா ஸ்ரீதர் ராஜூ, பி.அனிருத் சிதாராம், என்.ஜகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.விக்னேஷ், வி.யோமகேஷ், அஸ்வின் கிறிஸ்ட், ஆர்.சாய் கிஷோர், ரஹீல் ஷா, எம்.அபினவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com