33-வது சதம்: கோலியின் சாதனைகளுக்கு எல்லையில்லை!

விராட் கோலி 9 நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ளார். இந்த ஒன்பதிலும் அவர் சதமெடுத்துள்ளார்...
33-வது சதம்: கோலியின் சாதனைகளுக்கு எல்லையில்லை!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டர்பன் நகரில் பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3, யுவேந்திர சாஹல் 2, புவனேஷ்வர், பும்ரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய இந்தியா 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் கோலி-ரஹானே ஜோடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. கோலி-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களில் வெளியேறினார். கோலியும் 119 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தச் சதத்தின் மூலம் பல சாதனைகள் புரிந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி:

* இது கோலியின் 33-வது ஒருநாள் சதம். இலக்கை விரட்டும்போது எடுத்த 20-வது சதம். வெளிநாடுகளில் அவருடைய 19-வது சதம். கேப்டனாக இருந்து எடுத்துள்ள 11-வது சதம். தென் ஆப்பிரிக்காவில் இது அவருடைய முதல் சதம்.

* விராட் கோலி 9 நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ளார். இந்த ஒன்பதிலும் அவர் சதமெடுத்துள்ளார்.

இந்தியாவில் - 14 சதங்கள்
வங்கதேசத்தில் - 5 சதங்கள்
ஆஸ்திரேலியாவில் - 4 சதங்கள் 
இலங்கையில் - 4 சதங்கள் 
மேற்கிந்தியத் தீவுகளில் - 2 சதங்கள்
இங்கிலாந்து/நியூஸிலாந்து/ஜிம்பாப்வே/தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் - தலா 1 சதம்.

சச்சின் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜெயசூர்யா ஜிம்பாப்வேயிலும் சதம் எடுத்ததில்லை. கோலி பாகிஸ்தானில் சதம் எடுத்ததில்லை. ஆனால் அவர் அங்கு விளையாடியதேயில்லை. 

* இதுவரை விளையாடியுள்ள 9 நாடுகளில் கோலியின் பேட்டிங் சராசரி:

ஆஸ்திரேலியாவில் 50.05
வங்கதேசத்தில் 80.83
இங்கிலாந்தில் 52.46
இந்தியாவில் 58.03
நியூஸிலாந்தில் 62.16
தென் ஆப்பிரிக்காவில் 53.87
இலங்கையில் 47.31
மேற்கிந்தியத் தீவுகளில் 45.46
ஜிம்பாப்வேயில் 60.83

* தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. கடைசியில் கோலியின் சதத்தால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

* முதல் 44 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் கண்ட கேப்டன்கள்

34 - ரிக்கி பாண்டிங் (8-ல் தோல்வி)
34 - விராட் கோலி (9-ல் தோல்வி)
34 - கிளைவ் லாயிட் (10-ல் தோல்வி)

* ஒருநாள் போட்டியில் அதிக சதமெடுத்த இந்திய கேப்டன்கள்

விராட் கோலி - 11 சதங்கள் (44 போட்டிகள்)
கங்குலி - 11 சதங்கள் (146 போட்டிகள்)

* ஒருநாள் கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டு 42 வருடங்கள், 9 மாதங்களுக்குப் பிறகே ஒருநாள் போட்டியொன்றில் இரு கேப்டன்களும் சதமெடுத்தார்கள். நேற்று டு பிளெஸ்ஸியும் கோலியும் சதமெடுத்தது 4-வது முறையாகும். இதில் மூன்று முறை கோலி இடம்பிடித்துள்ளார். 

வில்லியம் போர்டர்ஃபீல்ட் - இயன் மோர்கன் - டப்ளின் (2013)
விராட் கோலி - முஷ்ஃபிகர் ரஹிம் - ஃபதுல்லா (2014)
விராட் கோலி - மேத்யூஸ் - ராஞ்சி (2014)
விராட் கோலி - டு பிளெஸ்ஸி - டர்பன் (2018)

* தவன் இருமுறை ஒருநாள் போட்டிகளில் ரன் அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்பு 2015 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் ஆனார். நேற்றும் ரன் அவுட் ஆனார். இரண்டிலும் மறுமுனையில் இருந்தவர் கோலி. இரண்டு போட்டிகளிலும் கோலி சதமெடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

* இந்திய அணியின் தரவரிசை
 
#1 - ஒருநாள் கிரிக்கெட்டில்
#1 - டெஸ்டில்
#3 - டி20யில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com