இந்திய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து: சாய்னா தோல்வி

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து: சாய்னா தோல்வி

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பீட்ரிஸ் காரெல்ஸை வீழ்த்தினார். இருவருக்கும் இடையேயான ஆட்டம் 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
சிந்து தனது அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொள்கிறார். சாய்னா தனது காலிறுதியில் 10-21, 13-21 என்ற செட்களில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கிடம் வீழ்ந்தார்.
காஷ்யப், சாய் பிரணீத் தோல்வி: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் பி.காஷ்யப் 16-21, 18-21 என்ற செட்களில் சீனாவின் கியாவ் பின்னிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் சாய் பிரணீத் 15-21, 13-21 என்ற செட்களில் தைவானின் செள டியன் சென்னிடம் தோற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 19-21, 19-21 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி கிடியன்-கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ இணையிடம் தோற்றது. மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை 17-21, 21-23 என்ற செட்களில் சீனாவின் டு யுவே-லி யின்ஹுய் ஜோடியிடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com