'விளையாடு இந்தியா' போட்டி: சென்னை சிறுவனுக்கு வெள்ளி

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சென்னையைச் சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சென்னையைச் சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
விளையாடு இந்தியா போட்டியின் 3-ஆவது நாளில், டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் சிறுவர்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் சுடும் போட்டி நடைபெற்றது. இதில், கோலாப்பூரின் சாஹு மானே தங்கமும், சென்னையின் ரித்திக் ரமேஷ் வெள்ளியும், தில்லியின் பர்த் மகிஜா வெண்கலமும் வென்றனர்.
சிறுமிகளுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் சண்டீகரின் ஜீனா கிட்டா முலிடமும், புணேவின் நந்திதா சுல் 2-ஆம் இடமும், இந்தூரின் யானா ரத்தோர் 3-ஆம் இடமும் பிடித்தனர்.
ஹாக்கி: சிறுமிகளுக்கான ஹாக்கி பிரிவில் ஹரியாணா, பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றன. தில்லியில் தயான்சந்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை 'ஏ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா 3-0 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேசத்தை வென்றது. பி பிரிவில் பஞ்சாப் 7-2 என்ற கணக்கில் ஒடிஸாவை வென்றது. ஆட்டங்களில் ஜார்க்கண்ட் 12-0 என சத்தீஸ்கரையும், சண்டீகர் 4-1 என தில்லியையும் வீழ்த்தின.
சிறுவர்களுக்கான ஹாக்கி பிரிவில் பஞ்சாப் 10-1 என ராஜஸ்தானை வென்றது. சண்டீகர் 2-1 என உத்தரப் பிரதேசத்தையும், ஹரியாணா 2-1 என ஒடிஸாவையும், கர்நாடகம் 3-2 என தில்லியையும் வென்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com