ஐசிசி வெளியிட்ட யு-19 உலக லெவன் அணியில் இடம்பிடித்த 5 இந்தியர்கள்

யு-19 உலகக் கோப்பை நிறைவுபெற்றத்தை அடுத்து சிறந்த 12 பேர் கொண்ட அணியை ஐசிசி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் 5 இந்தியர்கள் இடம்பிடித்தனர்.
ஐசிசி வெளியிட்ட யு-19 உலக லெவன் அணியில் இடம்பிடித்த 5 இந்தியர்கள்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவுபெற்றது. இதில் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த உலக லெவன் அணியை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி), ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் 5 பேர் இடம்பிடித்துள்ளனர்.

யு-19 இந்திய அணி கேப்டன் பிருத்வீ ஷா (261 ரன்கள்), இறுதிப் போட்டியில் சதமடித்த துவக்க வீரர் மன்ஜோட் கல்ரா, தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மான் கில் (372 ரன்கள்), இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அங்குல் ராய் (14 விக்கெட்டுகள்), வேகப்பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி (9 விக்கெட்டுகள்) ஆகியோர் இடம்பிடித்தனர்.

அதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ரெய்னார்ட் வேன் டோண்டர் (348 ரன்கள், அதிகபட்சம் 143 ரன்கள்), இந்த உலக லெவன் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் வான்டில் மக்வேட்டு (11 ஆட்டமிழப்புகள்), வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்டு கோயட்ஸீ (8 விக்கெட்டுகள்) ஆகியோரும் இடம்பிடித்தனர்.

நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஃபின் ஆலென் (338 ரன்கள்), பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி (12 விக்கெட்டுகள்), ஆஃப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் குவைஸ் அகமது (14 விக்கெட்டுகள்) ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பிடித்தனர்.

யு-19 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் அலிக் அதனாஸே (418 ரன்கள், 2 சதங்கள்) 12-ஆவது வீரராக சேர்ப்பு.

ஐசிசி வெளியிட்ட யு-19 உலகக் கோப்பை சிறந்த அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

பிருத்வீ ஷா, மன்ஜோட் கல்ரா, ஷுப்மான் கில், ஃபின் ஆலென், ரெய்னார்ட் வேன் டோண்டர், வான்டில் மக்வேட்டு, அங்குல் ராய், கமலேஷ் நாகர்கோட்டி, ஜெரால்டு கோயட்ஸீ, குவைஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, அலிக் அதனாஸே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com