இந்தியா பேட்டிங்: தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்கியுள்ளது... 
இந்தியா பேட்டிங்: தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்கியுள்ளது. 

மொத்தம் 6 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. எனவே, கேப் டவுன் ஆட்டத்தில் இந்தியா தனது 3-ஆவது வெற்றியையும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியையும் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன. டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியதைப் போல, ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் கண்ட வெற்றியின் மூலமாக ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கேப் டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில், கடந்த 1992 முதல் இதுவரை 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு  செய்துள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென், லுங்கி என்கிடி ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இது அறிமுக ஒருநாள் போட்டியாகும். மார்னே மார்கல் அணியில் இடம்பெறவில்லை. ஷமிசிக்குப் பதிலாக அண்டிலே பெலுக்வாயோ அணியில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com