பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க அங்கீகாரம்: பிசிசிஐ-க்கு சச்சின் டெண்டுல்கர் கடிதம்

பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க அங்கீகாரம்: பிசிசிஐ-க்கு சச்சின் டெண்டுல்கர் கடிதம்

பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ-க்கு புதன்கிழமை கடிதம் எழுதினார்.

பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டத்தினை அமல்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்.

பார்வையற்ற இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு பார்வையற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் (சிஏபிஐ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பொது தொண்டு அமைப்பாகவே இதுவரை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ நிர்வாக இயக்குநர் வினோத் ராய்-க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

பார்வையற்றோர் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நான்காவது வெற்றியை நாம் இந்த வேளையில் கொண்டாடி வருகிறோம். இந்த அருமையான தருணத்தில் அவர்களின் கிரிக்கெட் சங்கத்துக்கு அங்கீகாரம் அளித்து அனுமதி வழங்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நீண்ட நாள் கோரிக்கையான இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த தீவிரம் காட்ட வேண்டும். இது பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மிகப்பெரிய ஊக்கமாக அமையும். மேலும் இதன்மூலம் அவர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக மாதாந்திர ஓய்வு ஊதிய திட்டத்துக்கும் வழிவகை செய்ய வேண்டும்.

ஏனெனில் இந்திய அணிக்கு விளையாடி வரும் இதுபோன்ற பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் பல தடைகளைக் கடந்து இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளனர். இவர்களின் ஒவ்வொரு வெற்றியும் நாம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைகிறது. பிசிசிஐ இவர்களுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்துள்ளது. இனிவரும் காலங்களிலும் அது தொடரும் என நான் நம்புகிறேன் என்றார்.

பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி 2012-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2014 உலகக் கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை உள்ளிட்டவைகளை வென்றுள்ளது. இதில், இரு உலகக் கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே அணி என்ற சாதனையும் படைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com