அதிக வயதில் முதலிடம் பிடிக்க அரிய வாய்ப்பு!

டென்னிஸ் வரலாற்றில் அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அரிய வாய்ப்பு ரோஜர் ஃபெடரருக்கு அமைந்துள்ளது.
அதிக வயதில் முதலிடம் பிடிக்க அரிய வாய்ப்பு!

டென்னிஸ் உலகின் மன்னனாக வலம் வருகிறார் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் (வயது 36). இவர் தற்போது நெதர்லாந்தில் நடைபெறவுள்ள ரோட்டர்டாம் ஏடிபி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அதிக வயதில் முதலிடம் பிடித்த டென்னிஸ் வீரர் என்ற புதிய சாதனையைப் படைப்பார்.

தற்போது ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஃபெடரர், முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடாலை விட 155 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். எனவே இந்த தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் 180 புள்ளிகளைப் பெறுவார். இதனால் சுலபமாக முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபனில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர், அதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்று சாதனைப் படைத்தார். கடைசியாக 2015-ல் இந்த ரோட்டர்டாம் ஏடிபி தொடரில் ஃபெடரர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஜர் ஃபெடரரின் வரவுக்கு இந்த ஏடிபி தொடரின் ஒருங்கிணைப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக நடால் பங்கேற்காத நிலையில், ஃபெடரர் சம்மதம் தெரிவித்தது இந்த தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றார்.

கடந்த 1999-ம் ஆண்டில் முதன்முறையாக ரோட்டர்டாம் தொடரில் பங்கேற்றதன் மூலம் ஒரு சர்வதேச ஏடிபி தொடரில் விளையாடிய சிறப்பை நான் இங்கு பெற்றேன் என ரோஜர் ஃபெடரர் இந்த தொடர் குறித்து நினைவுகூர்ந்தார்.

தற்போது 36 வயதாகும் ஃபெடரர், இதில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதன் மூலம் அதிக வயதில் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் என்கிற சாதனைக்கு ரோஜர் ஃபெடரர் சொந்தக்காரர் ஆவார். முன்னதாக, அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி 33 வயது 131 நாட்கள் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com