ஃபெட் கோப்பை டென்னிஸ்: அங்கிதா அபாரம்

ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை அதிரடியாக வென்றார்.

ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை அதிரடியாக வென்றார். எனினும், ஒட்டுமொத்தமாக கஜகஸ்தானுக்கு எதிரான இந்த சுற்றில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 81-ஆம் நிலை வீராங்கனையான யூலியாவுக்கு எதிரான ஆட்டத்தை 2 மணி 25 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த அங்கிதா 6-3, 1-6, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டில் உலகின் 27-ஆம் நிலை வீராங்கனையாக இருந்த யூலியா, உலகின் முதல் 10 வீராங்கனைகளையும் வீழ்த்தியுள்ளார். அவருக்கெதிரான வெற்றி அங்கிதாவுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதனிடையே, மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் கர்மான் கெüர் தன்டி, உலகின் 55-ஆம் நிலை வீராங்கனையான ஜரினா டியாஸிடம் தோல்வி கண்டார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனிதா-பிரார்த்தனா தோம்ப்ரே இணை 0-6, 4-6 என்ற செட்களில் ஜரினா டியாஸ்-யூலியா புடின்ட்சேவா ஜோடியிடம் தோற்றது.
கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் தோல்வியால் ஃபெட் கோப்பை பிளே ஆஃப் வாய்ப்பை இந்தியா இழந்தது. எனினும், தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது இந்தியா. இந்நிலையில், குரூப் "ஏ'-வில் உள்ள சீனா அல்லது கஜகஸ்தான், பிளே-ஆஃப் இடத்துக்கான மோதலில் குரூப் "பி'-யில் முதலிடம் பிடித்த அணியுடன் மோதும். 
இந்த ஆட்டம் ஏப்ரலில் 
நடைபெற
வுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com