ஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா

ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மகளிர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மகளிர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது.
எனினும், முன்னதாக ஜப்பானுக்கு எதிரான குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-4 என வீழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான மகளிர் ஒற்றையர் சுற்று ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியை வீழ்த்தினார்.
இந்த ஆட்டம் 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சிந்து, இத்துடன் யமாகுசியை 8 முறை சந்தித்துள்ள நிலையில் தனது 5-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
எனினும், இந்திய அணியின் இதர வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 13-ஆம் நிலை வீராங்கனையான சயாகா சாடோ 21-12, 21-10 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீ கிருஷ்ணப் பிரியா குதரவள்ளியை வென்றார்.
மற்றொரு இந்தியரான அஸ்வினி பொன்னப்பாவை 14-21, 12-21 என்ற செட்களில் உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரி வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடி 17-21, 17-21 என்ற செட்களில் ஷிஹோ டனகா-கோஹாரு யோனேமோடோ இணையிடம் வீழ்ந்தது.
அதேபோல், அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் 18-21, 18-21 என்ற செட்களில் மிசாகி மட்சுடோமோ-அயாகா டகாஹாஷி இணையிடம் தோற்றது. 
இதனிடையே, "டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அதற்கு முன்பாக தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 
எதிர்கொள்கிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com