விளையாடு இந்தியா: ஒடிஸாவுக்கு தங்கம்

தில்லியில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையேயான "விளையாடு இந்தியா' போட்டியில், சிறுவர்களுக்கான ஹாக்கியில் ஒடிஸா முதலிடம் பிடித்தது.

தில்லியில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையேயான "விளையாடு இந்தியா' போட்டியில், சிறுவர்களுக்கான ஹாக்கியில் ஒடிஸா முதலிடம் பிடித்தது.
இறுதி ஆட்டத்தில் அந்த அணி 2-1 என்ற கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது. 3-ஆவது இடத்துக்கான போட்டியில் சண்டீகர் 5-1 என்ற கணக்கில் உத்தரப் பிரதேசத்தை வீழ்த்தியது.
இதேபோல், சிறுமிகளுக்கான ஹாக்கி போட்டியில் ஹரியாணா இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஜார்க்கண்டை வீழ்த்தி சாம்பியன் ஆனது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஞ்சாப் 5-4 என்ற கோல் கணக்கில் சண்டீகரை "த்ரில்' வெற்றி கண்டது. கூடைப்பந்துப் போட்டியில் சிறுவர் பிரிவில் பஞ்சாப் 78-76 என தில்லியை வீழ்த்தியும், சிறுமியர் பிரிவில் கேரளம் 90-47 என ஹரியாணாவையும் வீழ்த்தி சாம்பியன் ஆகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com