2019 உலகக் கோப்பையில் அஸ்வின், ஜடேஜா? தேர்வுக்குழுத் தலைவர், பந்துவீச்சு பயிற்சியாளர் விளக்கம்

2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது இடம் குறித்து தேர்வுக்குழுத் தலைவரும், பந்துவீச்சு பயிற்சியாளரும் விளக்கமளித்துள்ளார்.
2019 உலகக் கோப்பையில் அஸ்வின், ஜடேஜா? தேர்வுக்குழுத் தலைவர், பந்துவீச்சு பயிற்சியாளர் விளக்கம்

இந்திய ஒருநாள் அணியில் சமீபகாலங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோரது பந்துவீச்சு அபாரமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து எதிரணி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர். இதனால் ஆடும் லெவன் அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராண ஒருநாள் தொடரில் இவர்கள் ஜொலித்து வருகின்றனர். இந்திய அணி அங்கு முதன்முறையாக ஹாட்ரிக் வெற்றிபெற காரணமாக அமைந்தனர். இதனால் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் இடம் தற்போது கேள்விக்குரியாகியுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் அஸ்வின், லெக் ஸ்பின்னர் முறையில் பந்துவீசி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், இதே ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்தால் 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க நிச்சயம் வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே, ஐசிசி தரவரிசையில் முதல் இரு இடங்களை ஆக்கிரமித்து வரும் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது இடம் குறித்து கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், வருகிற 2019 உலகக் கோப்பை இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது இடம் குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருகிற 2019 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியை செயல்படுத்தி வருகிறோம். இதனால் அனைத்து வகையான திறமைகளும் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பந்துவீச்சு படை தயாராக உள்ளது.

தற்போது விளையாடி வரும் போட்டிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வீரருக்கும் தேவையான ஓய்வு அளிக்கும் விதமாக சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அப்போது தான் வீரர்கள் அனைவரும் அடுத்து நடைபெறவுள்ள தொடருக்கு தக்க உடல்தகுதியுடன் இருக்க முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் லெக் ஸ்பின்னர் முறையிலான பந்துவீச்சு நன்கு அமையும். எனவே குல்தீப், சாஹல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

இவர்கள் இருவருமே தைரியமாக பந்துவீசி வருகின்றனர். பந்தினை ப்ளைட் முறையில் வீச அஞ்சுவதில்லை. மேலும் விக்கெட்டுகளை நம்பியும் இவர்களது பந்துவீச்சு இருப்பதில்லை. இந்திய அணியில் தங்கள் பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் குல்தீப், சாஹல் ஆகியோரது பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது.

இதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர் என்ற அர்த்தமில்லை. அவர்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரிடம் நான் பேசியுள்ளேன். அவர்களின் நிலை குறித்து விளக்கமளித்துள்ளேன். தேர்வுக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவர்களுடன் பேசியுள்ளனர்.

இருவருமே தலைசிறந்த வீரர்கள், அவர்களுக்கும் இந்திய அணியில் தங்களின் பங்களிப்பு குறித்து நன்கு தெரியும். எனவே வருகிற 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டங்களில் இருந்து அவர்கள் விலக்கப்படவில்லை.

அதற்கான இந்திய அணியை இப்போதிலிருந்தே தயாரித்து வருகிறோம். இதனால் தரமான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com