மேக்ஸ்வெல் 'புதிய' சாதனை: முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்' வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மேக்ஸ்வெல் 'புதிய' சாதனை: முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்' வெற்றி

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்னில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம் டி20 போட்டிகளில் மொத்தம் 1,000 ரன்களைப் பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த 4-ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் தனியொருவனாக அந்த அணிக்கு வெற்றி தேடித்தருகிறார்.

இந்த தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது. இங்கிலாந்து சந்தித்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. நியூஸிலாந்து விளையாடிய 1 போட்டியிலும் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com