டாஸ் வென்று களமிறங்கிய இந்தியா தொடரை வென்று சாதிக்குமா?

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டாஸ் வென்று களமிறங்கிய இந்தியா தொடரை வென்று சாதிக்குமா?

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

மொத்தம் 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் 3-0 என முன்னிலையில் உள்ளது. எனவே இதிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இணைந்துள்ளார். 

இந்த ஆட்டம் "பிங்க் ஓடிஐ' என்ற பெயரில் விளையாடப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அந்நோய் பாதித்தவர்களுக்கான பலனுக்காவும் விளையாடப்படும் இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து விளையாடுகின்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் 3 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா.

தென் ஆப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டுமினி, டி வில்லியர்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, மோர்ன் மோர்கெல், லுங்கிசானி நிகிடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com