டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: புதிய சாதனை நிகழ்த்திய நியூஸி. வீரர்!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்லிவிடுவீர்கள்...
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: புதிய சாதனை நிகழ்த்திய நியூஸி. வீரர்!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்லிவிடுவீர்கள்.

சச்சின் டெண்டுல்கர். 

இந்நிலையில் டி20 போட்டியில் இதுவரை அதிக ரன்கள் எடுத்திருந்த நியூஸிலாந்தின் மெக்கல்லமின் சாதனையைத் தாண்டியுள்ளார் சகநாட்டு வீரரான மார்டின் கப்தில்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்லாந்தில் நடைபெற்று வரும் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 49 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் சதமெடுத்து அசத்தினார். இது அவருடைய 2-வது டி20 சதமாகும். இதன்மூலம் அவர் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

மெக்கல்லம் 71 ஆட்டங்களில் 2140 ரன்களுடன் முதலிடத்திலும் இந்தியாவின் விராட் கோலி 55 ஆட்டங்களில் 1956 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் இருந்தார்கள். இந்நிலையில் இன்று சதமெடுத்த கப்தில், மெக்கல்லமின் ரன்களைத் தாண்டி 2185 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து மெக்கல்லம் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

அதிக ரன்கள்

டெஸ்டுகள்: சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்கள்
ஒருநாள்: சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்கள்
டி20: மார்டின் கப்தில் 2185 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com