ஒருநாள் தொடர்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்கள்!

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இதுவே முதல் முறை... 
ஒருநாள் தொடர்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இதுவே முதல் முறை. 

செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் போது ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியும், இந்திய இன்னிங்ஸின்போது கேப்டன் கோலி 129 ரன்கள் விளாசியும் அணியின் வெற்றிக்கு அடிக்கோலினர். கோலி 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கிடி 2 விக்கெட் வீழ்த்தினார். கோலி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றார்.

ஒருநாள் தொடரின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் அரை சதங்கள்சராசரி
1.

 கோலி (இந்தியா)

 6 558 3 1 186.00
2 ஷிகர் தவன் (இந்தியா) 6 323 1 2 64.60
3. ரோஹித் சர்மா (இந்தியா) 6 170 1 0 28.33
4. ஆம்லா (தெ.ஆ.) 6 154 0 1 25.66
5. ரஹானே (இந்தியா) 6 140 0 1 35.00

ஒருநாள் தொடரின் டாப் 5 பந்துவீச்சாளர்கள்

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள் சிறந்த பந்துவீ ச்சு 
1.

 குல்தீப் (இந்தியா)

 6 17 4/23
2. சாஹல் (இந்தியா) 6 16 5/22
3. பூம்ரா (இந்தியா) 6 8 2/24
4. என்ஜிடி (தெ.ஆ.) 4 8 4/51
5. ரபாடா (தெ.ஆ.) 5 5 2/58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com