5 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஸ்வர் குமார்: சாதனை விவரங்கள்!

டி20 கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்...
5 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஸ்வர் குமார்: சாதனை விவரங்கள்!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்து வீழ்ந்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், ஜெயதேவ் உனத்கட், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

டி20 கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - புவனேஸ்வர் குமார். 

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

1. உமர் குல் (பாகிஸ்தான்)
2. டிம் செளதி (நியூஸிலாந்து)
3. அஜந்தா மெண்டிஸ் (இலங்கை)
4. லசித் மலிங்கா (இலங்கை)
5. இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
6. புவனேஸ்வர் குமார் (இந்தியா)

டி20 போட்டியில் சிறந்த பந்துவீச்சு (இந்தியா)

சாஹல் - 6-25 vs இங்கிலாந்து, 2017
புவனேஸ்வர் குமார் - 5-24 vs தென் ஆப்பிரிக்கா, 2018
அஸ்வின் - 4-8 vs இலங்கை, 2016.

* ரெய்னா, ரோஹித் சர்மா, ராகுல் என மூன்று இந்திய வீரர்களும் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமெடுத்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com