ஐபிஎல், உள்ளூர் போட்டிகளின் ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை பெற்றது ஸ்டார் இந்தியா!

பிசிசிஐ உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் நேரலையின் ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமைகளைப் பெற்றது ஸ்டார் இந்தியா ஊடக நிறுவனம்.
ஐபிஎல், உள்ளூர் போட்டிகளின் ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை பெற்றது ஸ்டார் இந்தியா!

இந்திய உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றுக்கான நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி தொடர்பான உரிமைகளை ஸ்டார் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

2018-19 சீசனுக்கான உள்ளூர் போட்டிகள் மற்றும் 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஆகிவற்றின் நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இருப்பினும் 2019, 2020 ஆண்டு ஐபிஎல், 2019-20 சீசனுக்கான உள்ளூர் போட்டிகள் ஆகியவற்றுக்கான நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை தொடர்பான ஒப்பந்தம் ஸ்டார் இந்தியா ஊடக நிறுவனத்துக்கு நீட்டிப்பது தொடர்பான அனைத்து உரிமைகளும் பிசிசிஐ-யிடம் உள்ளது. 

எனவே இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது அல்லது நிராகரிப்பது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் பிசிசிஐ மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com