தெ.ஆ. அணியின் கேப்டன் பதவிக்கு மார்க்ரம் சரியான தேர்வல்ல: ஸ்மித் விமரிசனம்!

மார்க்ரம் ஒருநாள் அணியில் தன் இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு...
தெ.ஆ. அணியின் கேப்டன் பதவிக்கு மார்க்ரம் சரியான தேர்வல்ல: ஸ்மித் விமரிசனம்!

2003 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடியது தென் ஆப்பிரிக்கா. அதன் பிறகு அந்த அணிக்குத் தலைமை தாங்கினார்  22 வயது கிரேம் ஸ்மித்.  

கிடத்தட்ட14 வருடங்கள் கழித்து 23 வயது எய்டன் மார்க்ரமுக்கு அதேபோல கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கிரேம் ஸ்மித்துக்கு இளம் வயதில் பதவி அளிக்கப்பட்டாலும் பிறகு அவர் தென் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கினார். ஆனால் மார்க்ரம் தனது முதல் தொடரிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளார். ஒருநாள் தொடரில் 5-1 என இந்திய அணி மகத்தான வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் 2 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட மார்க்ரமுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது தவறு என்று விமரிசனம் செய்துள்ளார் கிரேம் ஸ்மித். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எய்டன் மார்க்ரமுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது சரியான முடிவல்ல. எனக்கு முதலில் தற்காலிகமாகவே பதவி வழங்கப்பட்டது. நிரந்தரமாக அல்ல. ஆனால் மார்க்ரம் ஒருநாள் அணியில் தன் இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு நன்கு விளையாடும் வீரர்கள் அவசியம்.

மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு திரும்பி வந்த டி வில்லியர்ஸிடம் கேப்டன் பதவி அளிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு டுமினி அல்லது ஆம்லா ஆகியோரில் ஒருவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டிருக்கவேண்டும். மார்க்ரம் பேட்டிங்கில் கவனம் செலுத்த அனுமதித்திருக்கவேண்டும். கேப்டன் பதவி அளிக்கப்பட்டதால் அழுத்தத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இவரைப் போன்ற வீரர்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவேண்டும். 

ஆம்லா, டுமினி, மில்லர் ஆகிய வீரர்கள் மார்க்ரமின் கேப்டன் பதவிக்கு உதவி செய்யவில்லை. அவர்கள் சரியாக விளையாடவில்லை என்று தென் ஆப்பிரிக்க தேர்வுக்குழுவின் முடிவுக்குத் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எஞ்சியுள்ள டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com