சர்வதேச குத்துச்சண்டை: காலிறுதியில் சரிதா

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி திங்கள்கிழமை காலிறுதிக்கு முன்னேறினார்.

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி திங்கள்கிழமை காலிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, 60 கிலோ பிரிவில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் இத்தாலியின் மான்செஸ் கோன்சிஹாவை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இப்போட்டியில் 81 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் இந்தியாவின் சீமா புனியா உள்ளிட்ட 3 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றதால், அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
சீமான தனது இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் மிஹேலா நிகோலோவாவை எதிர்கொள்ள இருக்கிறார். இதனிடையே, 51 கிலோ பிரிவில் போட்டியிட்ட இந்தியாவிந் பிங்கி ஜங்க்ரா தனது முதல் சுற்றில் ருமேனியாவின் மரியா கிளாடியா நெசிடாவிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தார். நட்சத்திர வீராங்கனையான மேரி கோம் தனது 48 கிலோ எடைப் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் ஸ்டெலுடா தத்தாவை எதிர்கொள்கிறார்.
சோனியா லேதர் 57 கிலோ பிரிவில், சீனாவின் ஜு ஜிசுனை தனது முதல் சுற்றில் சந்திக்கிறார். 75 கிலோ பிரிவில் சவீதி பூரா, அமெரிக்காவின் லியா கூப்பரை தனது காலிறுதியில் சந்திக்கிறார்.
இதனிடையே, ஆடவருக்கான 60 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற சிவ தாபா, அதில் கஜகஸ்தானின் அடிலெட் குர்மெடோவை சந்திக்கிறார். அதே சுற்றுக்கு 91 கிலோவுக்கு கூடுதலான பிரிவில் சதீஷ் குமார் தகுதிபெற்றார்.
முகமது ஹுசாமுதின் (56 கிலோ) தனது முதல் சுற்றில் சீனாவின் ஸý பாக்ஸியாங்கை எதிர்கொள்கிறார். 69 கிலோ பிரிவில் போட்டியிடும் மனோஜ் குமார், மொராக்கோவின் அப்துல்கபீர் பெல்லாசெக்குடனான மோதலில் இருந்து தொடங்குகிறார். 75 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷன், மொராக்கோவின் முஸ்தஃபா அல் காரபிக்கு எதிராக மோதுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com