தரவரிசை: 101-இல் யூகி பாம்ப்ரி

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 101-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 101-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறியதை அடுத்து பாம்ப்ரி தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார். அந்தப் போட்டியின் மூலம் பாம்ப்ரிக்கு 48 ரேங்கிங் புள்ளிகளும், ரூ.2.73 லட்சம் பரிசுத் தொகையும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர்களில் பாம்ப்ரி முதலிடம் வகிக்கிறார். இந்நிலையில், புதிய பட்டியலில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் ஓரிடம் முன்னேறி 140-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். சுமித் நாகலும் ஓரிடம் ஏற்றம் கண்டு 216-ஆவது இடத்துக்கு வர, பிரஜனேஷ் கன்னேஸ்வரன் ஓரிடம் சறுக்கி 242-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
இரட்டையர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா 20-ஆவது இடத்திலும், திவிஜ் சரண் 42-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். லியாண்டர் பயஸ் 2 இடங்களை இழந்து 49 இடத்துக்கு வந்துள்ளார். அடுத்தபடியாக பூரவ் ராஜா 57-ஆவது இடத்தில் இருக்கிறார்.
மகளிர் தரவரிசை: மகளிர் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளில் முதலிடம் வகிக்கும் அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 2 இடங்கள் பின்தங்கி 255-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். கர்மான் கெüர் தண்டி 3 இடங்களை இழந்து 281-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளார். இதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா, மாற்றமின்றி 14-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com