மயங்க் அகர்வால் அபார சதம்: இந்திய அணிக்குத் தேர்வாகும் நாள் நெருங்குகிறதா?

இந்த வருட இந்திய உள்ளூர் கிரிக்கெட் சீசனின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் கர்நாடக வீரரான மயங்க் அகர்வால்...
மயங்க் அகர்வால் அபார சதம்: இந்திய அணிக்குத் தேர்வாகும் நாள் நெருங்குகிறதா?

இதற்கு மேலும் மயங்க் அகர்வாலை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தவிர்க்கமுடியுமா எனத் தெரியவில்லை. 

இந்த வருட இந்திய உள்ளூர் கிரிக்கெட் சீசனின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் கர்நாடக வீரரான மயங்க் அகர்வால். ரஞ்சி போட்டியில் முச்சதம் உள்ளிட்ட 5 சதங்களுடன் 8 ஆட்டங்களில் 1160 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியிலும் அவர் அசத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 6 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 552 ரன்கள் எடுத்துள்ளார்.  சையத் முஸ்டாக் அலி டி20 போட்டியில் மட்டும் சற்றே சுமாராக ஆடினார். 9 ஆட்டங்களில் 258 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இன்று, ஹைதராபாத்துக்கு எதிரான விஜய் ஹசாரே காலிறுதிப் போட்டியில் 7 சிக்ஸர் 12 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் மயங்க் அகர்வால். இவருடைய அதிரடியான ஆட்டத்தில் முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. சம்ரத் 13 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்தார்.

இந்த உள்ளூர் சீசனில் மயங்க் அகர்வால் எடுத்துள்ள ரன்கள்:

13,8,31,0,0,304*,176,23,90,133*,173,134,78,15,3,55,2,10,13,86,6,9,0,77,109,84,28,102,89,140.

இந்திய டெஸ்ட் அணியில் அவ்வளவு சுலபமாக ஒரு புதிய பேட்ஸ்மேன் நுழைந்துவிடமுடியாது. ஆனால் டி20 அணியில் தாராளமாக இடமளிக்கலாம். இதனால் அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள டி20 முத்தரப்புப் போட்டியில் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 27 வயது மயங்க் அகர்வாலை ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com