ஒருநாள் தரவரிசை 900 புள்ளிகளை தாண்டினார் கோலி; முதலிடத்தில் பும்ரா

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பிரிவில் முதலிடத்தில் இருக்கும் கோலி, 900 புள்ளிகளைக் கடந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் ஜஸ்பிரீத்
ஒருநாள் தரவரிசை 900 புள்ளிகளை தாண்டினார் கோலி; முதலிடத்தில் பும்ரா

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பிரிவில் முதலிடத்தில் இருக்கும் கோலி, 900 புள்ளிகளைக் கடந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்துக்கு வந்துள்ளார்.
இதில் ஒருநாள் தரவரிசையில் தற்போது 909 புள்ளிகளுடன் இருக்கும் கோலி, கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் ஒரே நேரத்தில் 900 புள்ளிகளைக் கடந்த 2-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனை புரிந்த முதல் வீரர் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆவார்.
அதேவேளையில், இரு பிரிவுகளிலும் 900 புள்ளிகளைக் கடந்தவர்கள் வரிசையில் கோலி 5-ஆவது வீரர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 சதங்கள் உள்பட மொத்தமாக 558 ரன்கள் விளாசிய நிலையில், கோலி இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் வரிசையில் கோலி தற்போது 7-ஆவது இடத்தில் உள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
இதனிடையே, இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் தவன் முன்னேற்றம் கண்டுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்களில் டூ பிளெஸ்ஸிஸ் ஓரிடம் முன்னேறி 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் ஏற்றம் கண்டு முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்தை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து முதலிடம் பிடித்த இளம் வீரர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார்.
யுவேந்திர சாஹல் 8 இடங்கள் முன்னேறி 21-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். குல்தீப் யாதவ் 15 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். தென் ஆப்பிரிக்க தொடரில் சாஹல், குல்தீப் முறையே 16, 17 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அணிகளுக்கான தரவரிசையில் முதல் 3 இடங்களை முறையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தன் வசம் வைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com