காமன்வெல்த் பாட்மிண்டன் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் தலைமையில் இந்தியா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் பங்கேற்பதற்கு, பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் பாட்மிண்டன் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் தலைமையில் இந்தியா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் பங்கேற்பதற்கு, பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு ஆட்டங்கள் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் பங்கேற்க, 11-ஆம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா களம் காண்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி இணை முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் விளையாடுகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிர் இரட்டையரில் சிக்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா களம் காண்கின்றனர். இப்போட்டியில் இந்திய அணி இடம் பெற்றுள்ள 'குரூப்-ஏ'வில் பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இதனால், இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது எளிதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கலப்பு அணிகள் பிரிவு முடிவுகள் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான பிறகு, அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களது பிரிவில் தனிநபர் போட்டிகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் பங்கேற்கின்றனர். அவற்றின் இறுதி ஆட்டங்கள் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com