டி20 மகளிர் கிரிக்கெட்: மழையால் 4-ஆவது ஆட்டம் ரத்து

தென் ஆப்பிரிக்க-இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற 4-ஆவது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

தென் ஆப்பிரிக்க-இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற 4-ஆவது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி வென்றது.
அதைத் தொடர்ந்து, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.
கடந்த 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும்கூட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிவிடும்.
முன்னதாக, சென்சுரியனில் புதன்கிழமை தொடங்கிய 4-ஆவது ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது. பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கிட்டது. சுமார் 2 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு ஆட்டத்தை கைவிடலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர். டி20 கேப்டனான ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இத்தொடரை கைப்பற்ற முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com