கோலியிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டுள்ளேன்: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்!

சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என இந்திய கேப்டன் விராட் கோலியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என...
கோலியிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டுள்ளேன்: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்!

சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என இந்திய கேப்டன் விராட் கோலியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

உலகின் சிறந்த வீரர்களிடமிருந்து  நிறைய கற்றுக் கொள்கிறேன். சிலசமயம் அவர்களைப் போல ஆடவும் முயற்சி செய்கிறேன். காரணமில்லாமல் அவர்கள் சிறந்த வீரர்களாக அறியப்படமாட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளமுடியுமோ அதைக் கற்றுக்கொள்கிறேன். 

இந்தியா போன்று நாடுகளில் விளையாடும்போது பேட்டிங் கிரிப்பை மாற்றிக்கொள்வேன். இந்தியாவில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே அப்படியொரு மாற்றம். இப்படி, பந்தை எதிர்கொள்ளும் விதம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். 

சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் விராட் கோலியிடமிருந்து சிறிது கற்றுக்கொண்டுள்ளேன். அவர் பந்தை எதிர்கொள்ளும்போது கைகளை எப்படி வைத்திருப்பார், ஆஃப் சைடில் அடிக்கும்போது கடைப்பிடிக்கும் உத்திகள்... இவற்றிலிருந்து சிறிது கற்றுக்கொண்டுள்ளேன். 

அதேபோல டி வில்லியர்ஸிடமிருந்து சற்றே பின்னால் சென்று ஆடுவது குறித்து கற்றுக்கொண்டேன். சில வருடங்களுக்கு முன்பு கேன் வில்லியம்சன் போல தாமதமாகப் பந்தை அடிக்க முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com