இந்திய அணியில் வீரர்கள் தேர்வு வெளிப்படையாக உள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வு வெளிப்படையாக உள்ளதாக அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார்.
விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த சௌரவ் கங்குலி.
விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த சௌரவ் கங்குலி.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வு வெளிப்படையாக உள்ளதாக அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார்.
கோவையில் தேசிய கண் மருத்துவர்கள் சங்க மாநாட்டையொட்டி கண் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடுகின்றனர். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இணையாக மகளிர் அணியினரும் சிறப்பாக விளையாடுகின்றனர்.
இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் நல்ல உடல் தகுதியோடு விளையாடி வருகின்றனர்.
இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு என்பது என்னுடைய காலத்திலும், தற்போதும் வெளிப்படைத்தன்மையோடு நடந்து வருகின்றது.
19 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் அணி, பயிற்சியாளர் ராகுல் திராவிட் தலைமையில் பல வெற்றிகளைக் குவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது அணியில் இடம்பெற்றுள்ள மணீஷ் பாண்டே, ரித்திமான் சாஹா, ஹார்திக் பாண்டியா ஆகிய இளம் வீரர்கள் மிகவும் திறமையுடன் விளையாடுகின்றனர்.
இந்தியாவில் பகல்-இரவு ஆட்டமாக டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் அனைத்து அணிகளிலும் திறமை வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, எந்த அணி வெற்றி பெறும் என்பதைக் கணிக்க முடியாது.
விராட் கோலி தலைமையிலான அணி பல வெற்றிகளைக் குவித்து வருவது பாராட்டுக்குரியது. கிரிக்கெட்டில் டி-20 போட்டி என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாட வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com