இன்று இறுதி டி20 ஆட்டம்: தொடரைக் கைப்பற்றும் பலப்பரீட்சையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.
இன்று இறுதி டி20 ஆட்டம்: தொடரைக் கைப்பற்றும் பலப்பரீட்சையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.
மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டு தொடர் சமநிலையில் உள்ளது. எனவே தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுமே தீவிர முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேவேளையில், இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் இந்த ஆட்டத்துடன் நிறைவடைகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க வெல்ல, ஒருநாள் தொடரை இந்தியா வரலாற்றுச் சாதனையுடன் வென்றது. எனவே, எஞ்சியிருக்கும் இந்த டி20 தொடரை வெல்வதற்கு இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த ஆட்டத்தைப் பொருத்த வரையில், இந்திய அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. டி20-இல் ஜெயதேவ் உனத்கட் மற்றும் யுவேந்திர சாஹல் அதிக ரன்கள் கொடுத்துள்ளனர். வயிற்று வழியால் அவதிப்பட்டு சற்று மீண்டுள்ள பும்ராவை களமிறக்க முடிவு செய்யும் பட்சத்தில் ஜெயதேவ் அவருக்கு வழிவிட வேண்டியிருக்கும்.
மற்றொரு தேர்வாக ஷர்துல் தாக்குர் கணக்கில் கொள்ளப்படலாம். இதுதவிர, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோரும் வரிசையில் உள்ளனர். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பாண்டியா இருக்கிறார்.
மறுபறம், டி20 முறையிலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா சற்று சாதகமான ஆட்டத்தை ஆடி வருவதாகவே கொள்ளலாம். பிங்க் ஓடிஐ ஆட்டம் மழை காரணமாக ஏறத்தாழ டி20 முறையில் நடைபெற்றபோது பின்தங்கிய நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா மீண்டெழுந்து வெற்றி கண்டது.
அதேபோல், செஞ்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டத்திலும் டுமினி தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அதிரடி காட்டியது. வெற்றி ஊக்கத்தில் இருக்கும் அந்த அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

நியூலேண்ட் மைதானத்தில்...
கேப் டவுனின் நியூலேண்ட் மைதானத்தில் இந்தியா டி20 ஆட்டத்தில் விளையாடுவது இது முதல் முறையாகும். இந்த மைதானத்தில் இதுவரை 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா 3-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதில் 2 வெற்றிகள் 2007 டி20 உலகக் கோப்பை போட்டியின்போது கண்டது. ஒரு வெற்றி 2016-இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெற்றது.

அணிகள் விவரம்
இந்தியா
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர்.
தென் ஆப்பிரிக்கா
ஜே.பி.டுமினி (கேப்டன்), ஃபர்ஹான் பெஹார்டியன், ஜூனியர் டலா, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜோன்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பேடர்சன், ஆரோன் ஃபாங்கிசோ, அன்டிலே பெலுக்வாயோ, டப்ரைஸ் ஷம்சி, ஜோன் ஸ்மட்ஸ்.

ஆட்டநேரம்: இரவு 9.30
நேரடி ஒளிபரப்பு: சோனி டென்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com