விஜய் ஹஸாரே கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் கர்நாடகம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகம், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகம், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
 தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மகாராஷ்டிரம் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கர்நாடகம் 30.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வென்றது.
 முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த மகாராஷ்டிர அணியில் ஸ்ரீகாந்த் முண்டே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கர்நாடக தரப்பில் கிருஷ்ணப்பா கெüதம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
 பின்னர் பேட் செய்த கர்நாடக அணியில் மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். கேப்டன் கருண் நாயர் 70, ரவிகுமார் சமரத் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். மகாராஷ்டிர தரப்பில் சத்யஜித் பச்சாவ் ஒரு விக்கெட் எடுத்தார்.
 இதனிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் ஆந்திர பிரதேசம்-செüராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com