இந்திய அணி எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்ததில்லை

"இந்திய அணி எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்ததில்லை. அதனாலேயே வெற்றிக்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம்' என்று இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
இந்திய அணி எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்ததில்லை

"இந்திய அணி எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்ததில்லை. அதனாலேயே வெற்றிக்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம்' என்று இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
 இதுகுறித்து அணிக்கு தலைமை வகித்த ரோஹித் சர்மா கூறியதாவது: இந்தத் தொடர் முழுவதுமாகவே ஆக்ரோஷமாகவே ஆடினோம். ஓர் அணியாக, எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் சோர்வடைந்ததில்லை. எனவே தான் வெற்றிக்குத் தகுதியுடையவர்களாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை கைப்பற்றியுள்ளோம். போட்டி தொடர்பாக எங்களது வியூகம் சரியான வகையில் செயல்பட்டது.
 கடைசி டி20 ஆட்டத்தில் முதல் 6 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தினோம். பந்துவீச்சாளர்கள் அருமையாகச் செயல்பட்டனர். 172 நல்லதொரு ஸ்கோர் என்று நினைத்தேன். ஆனால், முன்னேறி வந்த தென் ஆப்பிரிக்காவை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். இதுபோன்ற ஆட்டங்கள் எங்களுக்கு பாடம் கற்றுத் தருகின்றன என்று ரோஹித் சர்மா கூறினார்.
 தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜே.பி.டுமினி கூறியதாவது:
 இந்திய அணி பவர்பிளேயின்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டனர். எங்களது பவர்பிளேயின்போது நாங்கள் பவுண்டரியை நெருங்க இயலவில்லை. பவர்பிளேயில் இரு அணிகளுக்கு இடையேயான ரன்கள் வித்தியாசம் 30-ஆக இருந்தது. 173 என்ற ஸ்கோர் எட்டக்கூடிய ஒன்றுதான்.
 இந்திய வீரர்கள் வீசிய மெதுவான பந்து, அவர்களுக்கு கைகொடுத்தது. எங்கள் அணியில் ஜோங்கரின் பேட்டிங் பாராட்டுக்குரியது என்று ஜே.பி.டுமினி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com