குத்துச்சண்டை: அமித், விகாஸுக்கு தங்கம்

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பாங்கல், விகாஸ் கிருஷன் ஆகியோர் தங்களது பிரிவில் தங்கம் வென்றனர்.
குத்துச்சண்டை: அமித், விகாஸுக்கு தங்கம்

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பாங்கல், விகாஸ் கிருஷன் ஆகியோர் தங்களது பிரிவில் தங்கம் வென்றனர்.
49 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் அமித் பாங்கல், மொராக்கோவின் சையது மோர்தாஜியை வீழ்த்தினார். 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் விகாஸ் கிருஷன், அமெரிக்காவின் டிராய் ஐஸ்லேவை தோற்கடித்தார். 52 கிலோ பிரிவில் இந்தியரான கெளரவ் சோலங்கி, உக்ரைனின் டிமைட்ரோ ஜமோடேவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார்.
மகளிர் பிரிவில் மேரி கோம், சீமா பூனியா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 48 கிலோ பிரிவில் போட்டியிட்ட மேரி கோம், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார். 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.
இந்தியா மொத்தமாக 11 பதக்கங்கள் (2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com