2018 உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான அட்டவணை புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் குறித்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மொத்தம் 19 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

  • முதல் பிரிவு: அர்ஜென்டினா, நியூஸிலாந்து, ஸ்பெயின், ஃபிரான்ஸ்
  • 2-ஆம் பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா
  • 3-ஆவது பிரிவு: பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா
  • 4-ஆவது பிரிவு: நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்

இதில் நவம்பர் 28-ந் தேதி தொடங்கும் லீக் சுற்றுப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இதர அணிகளுடன் மோதுகின்றன. இதில் அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். 

2-ஆம் மற்றும் 3-ஆம் இடம்பிடிக்கும் அணிகளுக்கு இடையில் அடுத்த சுற்றுப்போட்டிகள் நடைபெற்று அவற்றில் வெல்லும் அணிகளும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் 8 அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் இடம்பெறும்.

பின்னர் டிசம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் முதலிடம் பிடித்த 4 அணிகளுடன் நாக்-அவுட் சுற்றில் முன்னேறிய 4 அணிகளும் பலப்பரீட்சை நடத்தும்.

இதையடுத்து டிசம்பர் 15-ம் தேதி அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 16-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com