துளிகள்...

துளிகள்...

கணுக்காலில் காயம் கண்டிருந்த இந்திய வீரர் ஷிகர் தவன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தற்போது தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, ஜடேஜா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
பெங்களூரில் வியாழக்கிழமை தொடங்கும் தேசிய ஹாக்கி பயிற்சி முகாமில் பங்கேற்கும் 33 பேர் கொண்ட குழுவில், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இந்த சீசனில் இதுவரை சிறப்பாக செயல்படாத நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி நிர்வாகங்கள், தங்களது பயிற்சியாளர்களை நீக்கம் செய்துள்ளன.
மும்பையில் நடைபெற்று வரும் 3-ஆவது சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஃபிடே மாஸ்டர் ரத்னவேல், ரஷிய கிராண்ட் மாஸ்டரான ஆன்ட்ரே டேவியாட்கினை வீழ்த்தி அசத்தினார்.
பாகிஸ்தானில் வரும் 7-ஆம் தேதி தொடங்கும் பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, மத்திய அரசின் ஒப்புதலுக்காக வரும் 5-ஆம் தேதி வரை காத்திருக்கப்போவதாக இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com