பிரிஸ்பேன் டென்னிஸ்: ரயோனிச், ஸ்வெரேவ் அதிர்ச்சித் தோல்வி

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
பிரிஸ்பேன் டென்னிஸ்: ரயோனிச், ஸ்வெரேவ் அதிர்ச்சித் தோல்வி

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
இதில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த உலகின் 24-ஆம் நிலை வீரரான ரயோனிச்சை, உலகின் 208-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போட்டிகளில் பங்கேற்காத ரயோனிச், பிரிஸ்பேன் போட்டியிலிருந்து இந்த சீசனை தொடங்கினார். எனினும், மினாருக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாகப் போராடி அவர் வீழ்ந்தார். முதல் செட்டில் ஒரு முறையும், 2-ஆவது செட்டில் இரு முறையும் ரயோனிச்சின் சர்வ்களை பிரேக் செய்தார் மினார். இறுதியில் அவரே வெற்றி பெற்றார்.
இதேபோல், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவை 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் அமெரிக்காவின் மைக்கெல் மோஹ். உலகின் 175-ஆம் நிலை வீரரான மைக்கெல், உலகின் 33-ஆம் நிலை வீரரான மிஸ்காவை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், சகநாட்டவரான மேத்யூ எப்டனை 6-7(3/7), 7-6(7/5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொள்கிறார். முன்னதாக டோல்கோபோலோவ், ஆர்ஜென்டீனாவின் ஹொராசியோ ùஸபாலோஸை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார். முன்னதாக கிர்ஜியோஸ் ஆட்டத்தின்போது கால்களில் காயத்தில் அவதிப்பட்டார். சிறிது நேரம் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் அவர் களமிறங்கினார்.
காலிறுதியில் கரோலினா
பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அவர் முந்தைய சுற்றில் அமெரிக்காவின் கேத்தரின் பெல்லிஸை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் கரோலினா, எஸ்டோனியாவின் கயா கானெபியுடன் மோதுகிறார். முன்னதாக கானெபி, உக்ரைனின் லெசியா சுரென்கோவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
இதேபோல், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் அனா கோஞ்சுவை வீழ்த்தினார். அவர் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவிட்டை 1-6, 7-6(7/2), 6-3 என்ற செட் கணக்கில் வென்ற பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச், காலிறுதியில் பிரான்ஸின் அலிஸ் கார்னெட்டை சந்திக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com