முதல் மூன்று ஓவர்களிலும் விக்கெட் எடுத்து அசத்திய புவனேஸ்வர்! தெ.ஆ. திணறல்!

தொடர்ந்து மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்...
முதல் மூன்று ஓவர்களிலும் விக்கெட் எடுத்து அசத்திய புவனேஸ்வர்! தெ.ஆ. திணறல்!

மூன்றாவது பந்தில் விக்கெட் எடுத்த புவனேஸ்வர் குமார் தொடர்ந்து மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். இதனால் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றத்தில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

கடந்த 1992-இல் இருந்து இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வென்றதில்லை. 5 தொடர்களை இழந்துவிட்ட நிலையில், ஒரேயொரு தொடரை டிரா செய்துள்ளது.

டாஸ் வென்ற அணி தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் பூம்ரா இடம்பெற்றுள்ளார். இது அவருடைய அறிமுகப்போட்டியாகும். ஷமி, புவனேஸ்வர் குமார், பூம்ரா, பாண்டியா, அஸ்வின் என ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் தொடரின் மூன்றாவது பந்தில் எல்கரை டக் அவுட் ஆக்கினார் புவனேஸ்வர். அடுத்த ஓவரில் எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கடுத்த ஓவரில் ஆம்லாவை மூன்று ரன்களில் வெளியேற்றினார் புவனேஸ்வர். இதனால் தான் வீசிய முதல் மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 

ஆனால் 9 ஓவரில் புவனேஸ்வர் பந்துவீச்சில் 4 பவுண்டரிகள் அடித்தார் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com