டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்! பூம்ரா அறிமுகம்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி...
டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்! பூம்ரா அறிமுகம்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

கடந்த 1992-இல் இருந்து இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வென்றதில்லை. 5 தொடர்களை இழந்துவிட்ட நிலையில், ஒரேயொரு தொடரை டிரா செய்துள்ளது.

டாஸ் வென்ற அணி தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் பூம்ரா இடம்பெற்றுள்ளார். இது அவருடைய அறிமுகப்போட்டியாகும். ஷமி, புவனேஸ்வர் குமார், பூம்ரா, பாண்டியா, அஸ்வின் என ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com