இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்கு: 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது தெ.ஆ.

தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற...
இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்கு: 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது தெ.ஆ.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 73.1 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்தியா, 73.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சனிக்கிழமை முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. 

 3-ஆவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிமிடம் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியினரைத் திணறவைத்தார்கள். முதலில் ஆம்லா 4 ரன்களில் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார். பிறகு ஷமி, ரபடாவை 5 ரன்களில் வெளியேற்றினார். இதன்பிறகு பூம்ரா தனது திறமையை நிரூபித்தார். அடுத்தடுத்து டுபிளெஸ்ஸிஸ் (0), குயின் டி காக் (8 ரன்கள்) ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். அடுத்ததாக பிளாண்டர் ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் 95 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா.

இதன்பிறகு டி வில்லியர்ஸும் மகாராஜாவும் கொஞ்சம் ரன்கள் சேர்த்தார்கள். அதுவரை விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்த புவனேஸ்வர் குமார், மஹாராஜாவை 15 ரன்களுக்கு வீழ்த்தினார். பிறகு அடுத்த ஓவரில் மார்கலையும் 2 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் புவனேஸ்வர் குமார். கடைசியாகக் களத்தில் இருந்த டி வில்லியர்ஸ் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து பூம்ரா பந்துவீச்சில் 35 ரன்களுடன் வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 41.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பில் ஷமில், பூம்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். புவனேஸ்வர் குமார், பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

இன்று தென் ஆப்பிரிக்க அணி 65 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அந்தளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com