என்னுடன் ஒப்பிட்டு பாண்டியாவுக்கு அழுத்தம் தரவேண்டாம்: கபில் தேவ் கருத்து

ஹார்திக் பாண்டியா ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக ஆவாரா என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்... 
என்னுடன் ஒப்பிட்டு பாண்டியாவுக்கு அழுத்தம் தரவேண்டாம்: கபில் தேவ் கருத்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்தினார் பாண்டியா. கபில் தேவுடன் பாண்டியாவை ஒப்பிடுவது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் என்ன நினைக்கிறார். இதோ அவருடைய பதில்:

ஹார்திக் பாண்டியா ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக ஆவாரா என்பதைக் காலம் தான் பதில் சொல்லும். அதை அடைவதற்கான திறமையைக் கொண்டுள்ளார் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக விளையாடினார். பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை அளிக்கிறார். 

பாண்டியாவை என்னுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்துக் கேட்கிறீர்கள். இரு கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடுவது சரியல்ல. அவருக்கென தனி பாணியும் அணுகுமுறையும் உள்ளன. ஒப்பீடுகள் மூலம் அவருக்கு அழுத்தம் தரவேண்டாம். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்கிறார். திறமையான கிரிக்கெட் வீரர்களை அவர்கள் போக்குக்கு விட்டு வளரவிடவேண்டும். முந்தையைத் தலைமுறையினரை விடவும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com