வாய்ப்பு மறுக்கப்பட்ட ரஹானா: ஆலன் டொனால்ட் அதிருப்தி!

ரஹானாவை அணியிலிருந்து வெளியேற்றியது தவறானது. கடந்தமுறை இங்கு வந்தபோது மிகச்சிறப்பாக விளையாடினார்...
வாய்ப்பு மறுக்கப்பட்ட ரஹானா: ஆலன் டொனால்ட் அதிருப்தி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. இந்த முடிவுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ரஹானாவை அணியிலிருந்து வெளியேற்றியது தவறானது. கடந்தமுறை இங்கு வந்தபோது மிகச்சிறப்பாக விளையாடினார். என்னைப் பொறுத்தவரை, கப்பலை நிலைநிறுத்த ரஹானே முக்கியமானவர். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுக்கக் கூடியவர். ரஹானே அணியில் இல்லாததைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள். மிகவும் உலகத் தரமான வீரர் அவர். 

இந்திய அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. முதல் டெஸ்டில் மிகச்சிறப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் பந்துவீசினார்கள். முதல் டெஸ்டில் அவர்களுக்குக் கிடைத்த பலன்களை அடுத்த டெஸ்டிலும் கொண்டுசெல்வார்கள். தென் ஆப்பிரிக்க அணி வேகமான பந்துவீச்சை நம்பியுள்ளது. ஆனால் இந்திய அணி பல்வேறு வகையான பந்துவீச்சுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com