யு-19 உலகக் கோப்பை இன்று தொடக்கம்

உலகின் பல நாடுகள் பங்கேற்கும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நியூஸிலாந்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

உலகின் பல நாடுகள் பங்கேற்கும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நியூஸிலாந்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே-பப்புவா நியூ கினியா, வங்கதேசம்-நமீபியா, நியூஸிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் குழுப் பிரிவு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த உலகக் கோப்பைப் போட்டி, கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, சில காரணங்களால் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 1998-ஆம் ஆண்டில் யு-19 உலகக் கோப்பை மீண்டும் தொடங்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் இப்போட்டி, இந்த ஆண்டு நியூஸிலாந்தில் 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் மோதும். இதையடுத்து, காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டிக்குத் தேர்வாகும் இரு அணிகள் பிப்ரவரி 3-ஆம் தேதி மோதும்.
பி-பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஏ பிரிவில் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, கென்யா அணிகளும், சி பிரிவில், வங்கதேசம், நமீபியா, கனடா, இங்கிலாந்து அணிகளும், டி பிரிவில், பாகிஸ்தான், இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஜனவரி 14-ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com