இரண்டாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 269/6

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்துள்ளது. 
இரண்டாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 269/6

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்துள்ளது. 
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான டீன் எல்கர், எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அணிக்கு ஏற்படுத்தினர். எனினும், 29.3-ஆவது ஓவரில் அஸ்வின் சுழலில் சிக்கி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் எல்கர். அப்போது, அவர் 31 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த ஹசிம் ஆம்லா மார்க்ரமுக்கு சிறப்பான இணையாக அமைந்தார்.
இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். இவர்களது இணையைப் பிரிக்க இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்தது. ஆனால், 47.3-ஆவது ஓவரில் அந்த வியூகம் பலித்தது. அஸ்வின் சுழலில் பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து 94 ரன்களுடன் மார்க்ரம் பெவிலியன் திரும்பினார். இன்னும் 6 ரன்கள் எடுத்திருந்தால் சதம் பதிவு செய்திருப்பார். இதையடுத்து, வந்த டி வில்லியர்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 82 ரன்களில் ஆம்லா ரன் அவுட் ஆனபோது அணியின் ஸ்கோர் 246-ஆக இருந்தது.கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் நிதானம் காட்ட, மறுமுனையில் குவிண்டன் டி காக் "டக்' அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து, பிலாண்டரும் ரன்களின்றி பெவிலியன் திரும்பினார்.
டூ பிளெஸ்ஸிஸ் 24 ரன்களுடனும், கேசவ் மஹராஜ் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
90 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் அணியில் இடம்பெற்ற பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சுருக்கமான ஸ்கோர்
தென் ஆப்பிரிக்கா 


90 ஓவர்களில் 
6 விக்கெட் இழப்புக்கு 269

விக்கெட் வீழ்ச்சி:
85-1 (டீன் எல்கர்), 148-2 (எய்டன் மார்க்ரம்), 199-3 (ஏபி டி வில்லியர்ஸ்), 246-4 ( ஹசிம் ஆம்லா), 250-5 (குவிண்டன் டி காக் ), 251-6 (பிலாண்டர்)

பந்துவீச்சு:

ஜஸ்பிரீத் பும்ரா 18-4-57-0, முகமது சமி 1 1-2-46-0, இஷாந்த் சர்மா 16-3-32-1, ஹார்திக் பாண்டியா 14-4-37-0, அஸ்வின் 31-8-90-3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com