ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன்....
ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஓர் ஆண்டில் மொத்தம் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும். முதலில் வருவது ஆஸ்திரேலியன் ஓபன்.

நடப்பு சாம்பியனும் , ஆஸ்திரேலியாவில் 7 முறை (2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017) கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முழு உடல் தகுதியுடன் இல்லை என்று கூறி இந்த முறை போட்டியிலிருந்து விலகி விட்டார். காயம் காரணமாக இங்கிலாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவும் இந்த முறை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. ஜப்பானின் கே.நிஷிகோரி, முன்னாள் "நம்பர் 1" வீராங்கனையும், 2 முறை (2012, 2013) தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் காயம் காரணமாக இந்த முறை இப்போட்டியில் பங்கேற்கவில்லை. மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், மகளிர் இரட்டையர் பிரிவில் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் பட்டம் வென்றவருமான இந்தியாவின் சானியா மிர்ஸா, இந்த ஆண்டு காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் இந்தமுறை முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறார். 20 வயது பெலிண்டா பென்கிக் 6-3, 7-5 என்கிற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளார். கடந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் செரீனாவுடன் மோதி தோற்றுப்போன பெலிண்டா, தற்போது அவரது சகோதரியைத் தோற்கடித்துத் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com